2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பொங்க வரும் ஆம்பள...

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிப்பில் தயாராகிய 'ஆம்பள' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில், இத்திரைப்படம் பொங்கலன்று வெளியிடப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாலித்துள்ள இத்திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வந்தது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது.

பொங்கலுக்கு இத்திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டுத்தான் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் விஷால். அதன்படி, படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி முடித்துள்ளார். நேற்று படப்பிடிப்பின் கடைசி நாள். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், 'ஆம்பள படப்பிடிப்பு முடிந்தது. பொங்கலுக்கு படம் தயார்' என்று கூறியுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .