2025 மே 19, திங்கட்கிழமை

பின்வாங்கும் அஜீத்?

George   / 2015 ஜனவரி 01 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்களுக்கு வெளியீடப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் என தயாரிப்பாளர் தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், தற்போது, இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதில்லை எனவும்  திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் படத்தை ஜனவரி 29ஆம் திகதி வெளியிடப் போவதாகவும் தமிழ் திரையுலகில் செய்தி வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று வெளியிடப்பட்டதுடன் திரைப்படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பொங்கல் வெளியீடாக விக்ரமின் 'ஐ', விஷாலின் 'ஆம்பள' ஆகிய திரைப்படங்கள் மட்டும் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

ஏற்கெனவே பொங்கல் வெளியீட்டில் இருந்து சிவகார்த்திகேயனின் 'காக்கிச்சட்டை' திரைப்படமும், கார்த்தியின் 'கொம்பன்' திரைப்படமும் விலகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X