2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கன்னடம் செல்லும் அனுஷ்கா

George   / 2015 ஜனவரி 05 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழிலும், தெலுங்கிலும் அனுஷ்காவின் அழகுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. 30 வயதைத் தாண்டினாலும் அனுஷ்காவின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என அவர்கள் சொல்லி வருகிறார்கள். அண்மையில் வெளிவந்த 'லிங்கா' திரைப்படத்தில் அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்து கிண்டலடித்தவர்கள் கூட சமீபத்தில் வெளியான 'ருத்ரமாதேவி' திரைப்படத்தின் ஒரே ஒரு புகைப்படத்தைப் பார்த்து வாயடைத்துப் போய்விட்டார்கள்.

தமிழில் அவர் அடுத்து நடிக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் புகைப்படங்களும் அனுஷ்காவின் அழகை அப்படியே வெளிப்படுத்தியிருக்கின்றன.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர். தமிழில் 11 திரைப்படங்களிலும், தெலுங்கில் 27 திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அனுஷ்கா. 

யோகா மாஸ்டராக இருந்த அனுஷ்காவை 2005ம் ஆண்டு வெளிவந்த 'சூப்பர்' என்ற தெலுங்குப் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக நாகார்ஜுனாதான் காரணமாக இருந்தார்.

 2006ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய 'ரெண்டு' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், 2009ஆம் ஆண்டு  வெளிவந்த 'வேட்டைக்காரன்' திரைப்படம் மூலம்தான் அனுஷ்கா தமிழில் பிரபலமானார்.

தற்போது 'என்னை அறிந்தால், பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் அனுஷ்காவிற்கு தற்போது கன்னடத்தில் தர்ஷன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். அதற்கு அனுஷ்கா சம்மதிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். 

திரையுலகில் அறிமுகமாகி பத்து வருடங்கள் கழித்தாவது தாய்மொழிப் திரைப்படத்தில் நடிக்க அனுஷ்கா சம்மதிப்பாரா என கன்னட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களின் ஆசையை அனுஷ்கா நிறைவேற்றுவாரா ?.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .