2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நானும் ரவுடி தான்

George   / 2015 ஜனவரி 06 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை திரைப்படங்களில் காதலிப்பதும் டூயட் பாடுவதுமாக நடித்த நயன்தாரா, விஜய் சேதுபதி ஜோடியாக நானும் ரவுடி தான் திரைப்படத்தில் காது கேளாதவராக வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் உருவாகவுள்ளதால்  விஜய் சேதுபதியுடன் நடிக்க அவர் சம்மதித்து உள்ளார்.

விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். பெரும் பகுதி படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்கிறது.

ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா, திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். அந்த திரைப்படங்களின் வரிசையில் நானும் ரவுடி தான் திரைப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .