2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷாவுக்கு நிச்சயம்...

Menaka Mookandi   / 2015 ஜனவரி 07 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்வரும் 23ஆம் திகதி, த்ரிஷாவுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அவர் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது செய்திகள் பரவுவது வழக்கம். இந்த செய்தி வெளியான கையோடு, த்ரிஷா அல்லது அவரது தாயாரின் மறுப்புகள் வெளியாகும்.

கடந்த 2014ஆம் ஆண்டில், த்ரிஷாவும் தயாரிப்பாளர் வருண் மணியனும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகின. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த செய்திகளை மறுத்தார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு ஒரு நல்லது நடந்தால் உங்கள் அனைவருக்கும் சொல்வேன் என்று அவர் தாயார் உமா அறிவித்தார். ஆனால் இந்த திருமண செய்தி முழுக்க உண்மையானது என்றும், விரைவில் வெளிப்படையாக அறிவிக்கத்தான் போகிறார்கள் என்றும் மீடியா நம்பியது.

அதற்கேற்ப, த்ரிஷாவும் வருண் மணியனும் தனி விமானத்தில் சுற்றுலா கிளம்பினார்கள். இந்த நிலையில்தான் த்ரிஷாவே தன் திருமணச் செய்தியை அறிவித்துள்ளார்.

இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், 'ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு, வரும் ஜனவரி 23ஆம் திகதி வருண் மணியனுடன் எனது திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் மிகவும் தனிப்பட்ட நிகழ்வு' என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X