2025 மே 19, திங்கட்கிழமை

உயிர்தப்பிய ப்ரியங்கா

George   / 2015 ஜனவரி 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா விபத்தொன்றிலிருந்து அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். 

தனது குடும்பத்தினருடன் மாலைத்தீவுக்கு சுற்றுலா சென்ற ப்ரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் ஒரு படகில் கடல் மற்றும் கடற்கரையோர அழகை ரசித்தபடி சென்று கொண்டு இருந்தனர். 

திடீரென அந்த படகு பவளப்பாறையொன்றில் பயங்கரமாக மோதியது. இதில் படகு உடைந்தது. எல்லோரும் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். 

இதை பார்த்ததும் கடலோர காவல் படையினர் அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு விரைந்தனர். 

உடைந்த படகை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை வேறு படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். 

இந்த விபத்தில் ப்ரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X