2025 மே 19, திங்கட்கிழமை

நிலைத்து நிற்பது ரொம்ப கஷ்டம்:அஞ்சலி

George   / 2015 ஜனவரி 17 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கதாநாயகிகள் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது. அவர்களின் மார்க்கெட் கொஞ்சகாலம்தான் என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். 

குடும்ப பிரச்சினைகளால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் ஜெயம்ரவியுடன் அப்பாடக்கரு, விமலுடன் மாப்ள சிங்கம் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

அண்மையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கதாநாயகிகள் சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது. அவர்களின் மார்க்கெட் கொஞ்சகாலம்தான். இப்போது நிறைய பேர் கதாநாயகிகளாக நடிக்க வருகிறார்கள். யாரும் ரொம்ப நாட்கள் நிரந்தரமாக நிலைப்பது இல்லை. சிலர் மட்டும் திறமையால் கொஞ்ச நாட்கள் நீடிக்கிறார்கள்.

பழைய கதாநாயகிகள் சாவித்ரி, ஸ்ரீதேவி போன்றோர் சினிமாவில் ரொம்ப காலம் நிலைத்து இருந்தார்கள். அவர்களை போல் இப்போது எந்த நடிகையாலும் நிலைக்க முடியாது. என்னை பொருத்தவரை கைவசம் நிறைய திரைப்படங்கள் உள்ளன. பிசியாக நடித்து வருகிறேன்.

பொங்கலுக்கு கூட படப்பிடிப்பில்தான் இருந்தேன். பண்டிகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பொங்கல் பண்டிகையிலும் பட்டங்கள் பறக்க விட்டு கொண்டாடி இருக்கிறேன். பட்டம் பறக்க விட எனக்கு நன்றாக தெரியும். போட்டியிலும் நான்தான் ஜெயிப்பேன் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X