2025 மே 19, திங்கட்கிழமை

ஆண்ட்ரியா சரிப்பட்டு வருவாரா?

George   / 2015 ஜனவரி 18 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி திரைப்படங்களை இயக்கிய சரவணன் தற்போது ஜெய்-ஆண்ட்ரியா நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் வலியவன். 

இவன் வேற மாதிரி திரைப்படத்துக்கு ஹீரோயின் தேடியபோது கிட்டத்தட்ட 400 நடிகைகளை தேடி கடைசியாக டெல்லி அழகி சுரபியை ஓகே செய்த சரவணன், இந்த வலியவன் திரைப்படத்துக்காகவும் மாதக்கணக்கில் ஹீரோயின் தேடினாராம். 

கடைசியாகத்தான், எதற்கு புதுமுகத்தை நடிக்க வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும். ஒரு பிரபல நடிகையையே நடிக்க வைக்கலாமே என்றபோதுதான் ஆண்ட்ரியா அவர் மனதில் வந்து நின்றாராம்

ஆனால், கூடவே ஆண்ட்ரியாவை நினைத்து அவரது மனதில் ஒருவித பயமும் வந்ததாம். அது என்ன பயம்? என்று கேட்டால், அவர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் கௌதம ;மேனனின் இயக்கத்தில் அறிமுகமானவர். 

அதையடுத்து, விஸ்வரூபம் திரைப்படத்தில் கமல் போன்ற பெரிய நடிகர்களுடனெல்லாம் நடித்திருக்கிறார். அதனால் நமக்கு சரிப்பட்டு வருவாரா? என்பதுதான் அந்த பயத்தின் அர்த்தமாம். இருப்பினும் அவரை அழைத்து பேசிதான் பார்ப்போமே என்று ஆண்ட்ரியாவுடன் சந்திப்பு நடத்தினாராம்.

ஆனால் அவரோ இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரொம்ப இயல்பாக எளிமையாக பழகினாராம். இவர் எப்படி சொன்னாலும் அப்படியெல்லாம் நடிப்பதற்கு தயாராக இருந்தாராம். 

பின்னர், படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோதும் ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துக்கொடுத்து கைதட்டல் பெற்றாராம் ஆண்ட்ரியா. 

விளைவு, என் திரைப்படங்களில் இதுவரை நடித்த நடிகைகளில் ஆண்ட்ரியாதான் பெஸ்ட் என்று வாயார புகழ்ந்து தள்ளி வருகிறார் சரவணன்.

இதனால் அவரைப்போலவே ஆண்ட்ரியா நமக்கெல்லாம் செட்டாக மாட்டார் என்று நினைத்து விலகி நின்ற மேலும் சில கோலிவூட் இயக்குநர்களும் இப்போது ஆண்ட்ரியாவை சந்தித்து கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X