2025 மே 19, திங்கட்கிழமை

அனிருத்துக்கு அன்புத் தொல்லை

George   / 2015 ஜனவரி 18 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெரும்பாலும் முன்னணி நடிகர்கள்தான் ரசிகைகளின் அன்புத்தொல்லையில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால், இப்போது வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளரான அனிருத்தும், ரசிகைகளின் அன்புத்தொல்லையில் சிக்கித் தவிக்கிறாராம்.

அவரது அலைபேசிக்கு வரும் அதிகமான அழைப்புகள் ரசிகைகளுடையதாகவே இருப்பதால் அவர் தனது அலைபேசி இலக்கங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு வருகிறாராம்.

இதுபற்றி அனிருத் கூறுகையில், '3 திரைப்படத்தில் வரும் 'வை திஸ் கொலவெறி' பாடல் ஹிட்டானபோது எனக்கு சில ரசிகர்களும், ரசிகைகளும் அலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அப்போது அது எனக்கு பெரிய உந்துதலாக இருந்தது. 

அதனால், அவர்களிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் நானும் சளைக்காமல் பேசிவந்தேன். ஆனால் அதையடுத்து நான் இசையமைத்த எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்த பிறகு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். 

குறிப்பாக, கல்லூரி மாணவிகளின் அன்புத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேரம் கெட்ட நேரங்களில் அவர்கள் பேசுவதால் எனது இசை வேலைகள் பாதிக்கின்றன.

அதனால், எனது அலைபேசி இலக்கங்களை அடிக்கடி மாற்றி வந்த நான், இப்போது புதிய இலக்கத்தை மிகவும் இரகசியமாக வைத்திருக்கிறேன்' என்கிறார் அனிருத்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X