2025 மே 19, திங்கட்கிழமை

அஜீத்துடன் நடித்தது கனவு

George   / 2015 ஜனவரி 18 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் அஜீத்துடன் நடித்தது கனவு போல இருந்தது என பார்வதி நாயர் மனந்திறந்துள்ளார். மொடலிங், ஓவியம் என ஆர்வம் உடைய இவர், நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார்.

தமிழில் தனது முதல் திரைப்படமான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளார்.

என்னை அறிந்தால் வாய்ப்பை பற்றி பார்வதி நாயர் கூறுகையில், 'காலம் என்னை கனிவாய் வழிநடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ் திரைப்படமே அஜீத் மற்றும் கௌதம் உடன் அமைத்திருக்கிறது.

கௌதம் இந்த திரைப்படத்துக்கு அழைக்கும் முன்பு வரை தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.

அஜீத் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் நடித்தது ஒரு கனவாய் இருந்தது.

நான் பணிபுரிந்த இயக்குநர்களில் பழகுவதற்கு மிக இலகுவானவர் கௌதம். இவர் இருக்கும்பொழுது படப்பிடிப்பு தளமே மிக பரபரப்பாக இருக்கும். என்னை அறிந்தால் குழுவினருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கும் நன்றி கூறியே ஆக வேண்டும்.

எவ்வளவு பெரிய நிலைகளுக்கு சென்றாலும், உச்சத்தில் நின்றாலும் அடக்கத்துடன் இருக்க வேண்டும். இப்படி என்னை அறிந்தால் படத்தின் மூலம் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்' என்கிறார் பார்வதி நாயர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X