2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கொம்பனுடன் இணையும் ஸ்ரீதிவ்யா

George   / 2015 ஜனவரி 18 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜீவா நடித்த ரௌத்ரம், விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய திரைப்படங்களை இயக்கிய கோகுல், அடுத்து கார்த்தி நடிக்கும் காஷ்மோரா என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

கார்த்தி நடித்துள்ள கொம்பன் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கடுத்து அவர் காஷ்மோரா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும், நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என்றும் சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது.

தற்போது திரைப்படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கப் போவதாகவும், ஒரு நாயகி கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து விட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வடிவேலு, நயன்தாரா திரைப்படத்தில் இருக்கிறார்களா என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கோகுல் இயக்கிய முதல் திரைப்படமான ரௌத்ரம் அதிகம் பேசப்படவில்லை என்றாலும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வித்தியாசமான திரைப்படமாக அமைந்து அதிகம் பேசப்பட்டது.

காஷ்மோரா திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .