2025 மே 19, திங்கட்கிழமை

'என்னம்மா இப்படி பண்றீங்களமா'

George   / 2015 ஜனவரி 22 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி இணைந்திருக்கும் புதிய திரைப்படம் 'ரஜினி முருகன்'. 


நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார். 


இந்த திரைப்படத்தில் தனியார் தொலைக்காட்சியில் வந்த காமெடி நிகழ்ச்சியில் பேசிய 'என்னம்மா இப்படி பண்றீங்களமா' என்ற பிரபலமான வசனத்தை கருவாக வைத்து யுகபாரதி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். இப்பாடலுக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். 


இப்பாடலின் படப்பிடிப்பை மதுரையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இப்பாடலை டி.இமானின் பிறந்தநாளான வரும் ஜனவரி 24ஆம் திகதி படமாக்கவுள்ளார்களாம். 


அன்றைய தினத்தில் படப்பிடிப்பில் வைத்து டி.இமானின் பிறந்தநாளை கொண்டாடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X