Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜீத், கமல் ஹாஸனுடன் நடிப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை என புதுமுக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கர்நாடக அழகியான பார்வதி நாயர், அஜீத்தின் என்னை அறிந்தால், கமல் ஹாஸனின் உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். பெங்களுரை சேர்ந்த பார்வதி, நடிக்க வந்த உடனேயே இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'புதுமுகம் என்பதால் சிறிய திரைப்படங்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். இப்படி பெரிய ஹீரோக்களின் திரைப்படத்தில் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
என்னை அறிந்தால் கௌதம் மேனன் திரைப்படம், அவர் திரைப்படத்தில் வரும் பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்.
அதனால் அந்த திரைப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் என்னுடைய ஆளுயர புகைப்படத்தை பரிசளித்து அசத்திவிட்டார் அஜீத். அவர் என்னை அழகாக புகைப்படம் எடுத்து அதை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்து, பிரேம் போட்டு பரிசளித்தார்.
அவர் அருமையாக புகைப்படம் எடுப்பார். அவர் என் நடிப்பை பாராட்டியே அந்த பரிசை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன். திரைப்படத்தில் கமல் ஹாஸனை பார்த்துள்ளேன். ஒரு முறை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
நான் எந்த பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது இல்லை. உத்தம வில்லன் படப்பிடிப்பின் முதல் நாள் பதட்டமாக இருந்தது. அஜீத்தும் சரி, கமலும் சரி படப்பிடிப்பில் நான் பதட்டமில்லாமல் நடிக்க உதவி செய்தார்கள். என்னை அறிந்தால், உத்தம வில்லன் திரைப்படங்களில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது' என்றார் பார்வதி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .