Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவை பொறுத்தவரை மிக வசதியான அரண்மனை போன்ற வீட்டில் உள்ள பெண்களை 'தம்புராட்டி' என அழைப்பது வழக்கம். இப்போது அப்படி ஒரு 'ஹேமா தம்புராட்டி' யாக மாறியிருக்கிறார் நம்ம 'டார்லிங்;' நிக்கி கல்ராணி.
இது மலையாளத்தில் அவர் தற்போது நடிக்கும் 'ருத்ர சிம்ஹாசனம்' திரைப்படத்துக்காக ஏற்றிருக்கும் பாத்திரம்தான். சுரேஷ்கோபி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தை சிபு கங்காதரன் என்பவர் இயக்குகிறார்.
இருப்பினும் இது ஒரு ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திரைக்கதையாக உருவாவதாலோ என்னவோ, நிக்கியின் பாத்திரத்துக்காக அவரது எடையை கொஞ்சம் கூட்ட சொன்னாராம் இயக்குநர். நிக்கியும் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. கொஞ்ச நாளில் பூசின மாதிரி வந்து நின்றாராம்.
ஆனால், எவ்வளவு எடை கூடியிருக்கிறோம் என்பதை சோதித்து பார்க்க, நிக்கிக்கு விருப்பம் இல்லையாம். அது தெரிந்தால் பயம் வந்துவிடுமாம்.
அதேபோல நிக்கி நடித்த '1983' திரைப்படம் போலவே, இதிலும் துளிகூட கவர்ச்சிக்கு வேலை வைக்காத பாத்திரமாம். அதனால் திரைப்படம் முழுக்க தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, அதிலும் பிளையின் கொட்டன் புடவை கட்டிக்கொண்டுதான் நடித்திருக்கிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago