2025 மே 19, திங்கட்கிழமை

அதிர்ச்சியில் த்ரிஷா

George   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இருவருக்கும் கடந்த மாதம் 23ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தூதராக இருந்த த்ரிஷாவுக்கு அந்த அணியையே வாங்க ஆசை வந்ததாகவும், அவருக்காக வருண் மணியன் சென்னை அணியை வாங்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதனை வருண் மணியன் மறுத்து விட்டார்.


ஆனாலும், சென்னை அணியை வாங்கினால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று வருண் மணியனுக்கு தினமும் தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வருகிறதாம். இது தொடர்பாக வருண்மணியன் தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


அதில் அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேட்டுள்ளார். இது தொடர்பாக தேனாம்பேட்டை பொலிஸார்; வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வருண் மணியனுக்கு வரும் கொலை மிரட்டல்களால் த்ரிஷா அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X