Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரம்ப காலத்தில் தம்மை வளர்த்துவிடும் ஊடகங்களை, தாங்கள் வளர்ந்த பிறகு, ஜென்ம எதிரிகள் போன்று நடிகர்-நடிகைகள் பார்க்கும் நிலைதான் அண்மைக்காலமாக நிலவி வருகிறது. வடிவேலுவை தொடர்ந்து, த்ரிஷாவும் இந்த பட்டியலில் இணைந்து கொண்டுள்ளார்.
வைகைப்புயல் வடிவேலு, தனது மகனின் திருமணத்தை மதுரையில் நடத்திய போது, அதற்கு எந்த ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அந்த பக்கமாக சென்றவர்களுக்கு கூட உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் ஊடகங்கள் விடயத்தில் வடிவேலுவை போன்று மனநிலையைத்தான் கடைப்பிடிக்கிறார்.
வருண்மணியனுடன் தனக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தத்துக்கு எந்த ஊடகங்களையும்; நெருங்கவிடவில்லை. சினிமா நண்பர்களுக்கு அவ்வப்போது கொடுக்கும் விருந்துபசாரங்களில் ஊடகங்களை எப்படி புறக்கணித்தாரோ அதே நிலையைதான் தொடர்ந்தார்.
இதேபோல், அடுத்தபடியாக தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்துக்கும் அவர் ஊடகங்களை அனுமதிக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
அங்கு ஏதேனும் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அதை ஊடகங்கள் பெரிய பிரச்சினையாக்கி விடுவார்கள் என்று காரணம் கூறுகிறார்.
திருமணத்துக்குக்கூட அதிக நெருக்கமானவர்களுக்கே அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ள த்ரிஷா, அதன்பிறகு நடைபெறும் வரவேற்புக்கு மட்டும் முக்கியமான ஊடகங்களை அனுமதிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago