2025 மே 19, திங்கட்கிழமை

வதந்தியால் வாடிப்போன அனுஷ்கா

George   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வளவு அழகானவர் அனுஷ்கா என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். தமிழில் மிகப் பெரிய வெற்றித் திரைப்படங்களில் அவர் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இருந்தாலும் அனுஷ்காவுக்கு இங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த ரசிகர்களை, லிங்கா, என்னை அறிந்தால் ஆகிய இரு திரைப்படங்களும் திருப்திப்படுத்தவில்லை. இரண்டு திரைப்படங்களிலுமே தோற்றத்திலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இவை தமிழ் திரைப்படங்களில் உள்ள நிலை என்றால், அனுஷ்கா பெரிதாக நம்பியிருக்கும் பாகுபலி திரைப்படத்தைப் பற்றி தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி பரவியது. 

அதாவது இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்கா இடம் பெற மாட்டார், இரண்டாவது பாகத்தில்தான் அனுஷ்கா வருகிறார் என்று தகவல் பரவியது. 

ஆனால், இப்படிப்பட்ட வதந்தியை திரைப்படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன. திரைப்படத்தின் முதல் பாகத்திலேயே அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா என அனைத்து நட்சத்திரங்களும் வருகிறார்கள்.

பரவி வரும் வதந்தியும் உண்மையல்ல என்று தெரிவித்திருக்கிறார்களாம். இனி, இந்த திரைப்படத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாராவது பேசவும் தடை விதித்திருக்கிறார்களாம்.

அனுஷ்காவை சுற்றி மட்டுமே கடந்த சில காலமாக ஏன் இப்படிப்பட்ட செய்தி பரவி வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் புலம்புகிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X