2025 மே 19, திங்கட்கிழமை

பட்டையை கிளப்பும் மாதுரிமா

George   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்காலி நடிகையான மாதுரிமா பெனர்ஜி - தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாகிக் கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் தமிழில் வெளியான ஆம்பள திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நாக சைதன்யா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இயக்குநர் சுதீர் வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் மாதுரிமா. 

சும்மா கவர்ச்சிக்காக மட்டும் இந்த பாடலை படமாக்கவில்லை, திரைப்படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் கதையோடு ஒன்றியே வருகிறது என்று கூறுகிறார் இயக்குநர் சுதீர் வர்மா. 

பாடல் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜூனியர் என்டிஆரின் டெம்பர் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், மேலும் ஆக்ஷன் காட்சிகளிலும் இவர் பட்டைய கிளப்புகிறாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X