2025 மே 19, திங்கட்கிழமை

எனக்கென யாரும் இல்லையே...!

George   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எனக்கென யாரும் இல்லையே 
உனக்கது தோண வில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் வனமோ இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்ல நேர்ந்தால் உயிரே போகும்'

'ஆக்கோ' திரைப்படத்தின் ஒற்றை பாடல் காதலர் தினமான சனிக்கிழமை(14) வெளியிடப்பட்டது. 'எனக்கென யாரும் இல்லையே' எனத் தொடங்கும் இந்தப் பாடலை 'அதாரு அதாரு' புகழ் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தன் இசையால் இள நெஞ்சங்களை கவர்ந்த அனிருத் பாடியுள்ளார்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் கூறும்போது, 'காதலுக்காக காத்திருப்பவர்கள், காதல் இல்லாதவர்கள், காதலில் கசந்து போனவர்கள் என அனைவருக்கும் இப்பாடலை சமர்பணம் செய்கிறோம். அனைவரும் முணுமுணுக்கும் ஒரு பாடலாக இது இருக்கும்.' எனக் கூறினார்.

மூன்று ஆர்வக்கோளாறு இளைஞர்கள் செய்யும் காரியத்தால் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் ஆக்கோ திரைப்படத்தின் கதை.

ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு ஆகியோரின் இணை தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாம் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சிவா ஜி.ஆர்.என் ஒளிப்பதிவு செய்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X