2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

காதலர் தினத்தில் கலாய்த்த லட்சுமி

George   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் சனிக்கிழமை(14) அதிகாலையில் நடிகை ராய் லட்சுமி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு கருத்து (டுவிட்), பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி விட்டதுடன் பலரை அதிர்ச்சியடையவும் செய்தது. 

அப்படி என்ன கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்தார் என்று கேட்கின்றீர்களா?

'ஓ மை காட்.. ஒரு வழியா நானும் என்னோட லவ்வரை இந்த காதலர் தினத்துல கண்டுபிடிச்சுட்டேன்'. இதுதான் அவர் பதிவு செய்த டுவிட்..

அதனை பார்த்து அவருடைய ரசிகர்கள் பல அதிர்ச்சியடைய.. 

சில நொடிகளில் 'ஹாஹாஹா.. நல்லா ஏமாந்தீங்களா..! கொஞ்ச நேரத்துல நிறைய பேரோட இதயத்தை உடைச்சிருப்பேனோ..? ஆனால் எப்படி என்னை நேசிக்கும் அன்பு உள்ளங்களாகிய உங்கள் இதயங்களை என்னால் உடைக்க முடியும்.' என மற்றுமொரு கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார். 

இதன் பின்னர்தான் சில நொடிகள் நின்றுபோன ரசிகர்களில் இதயத்தில் துடிப்பு சத்தம் கேட்டதாம். 'ஏம்மா இதுலகூடவா விளையாடுவீங்க.. என்னம்மா.. இப்டி பண்றீங்களேம்மா' .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .