2025 மே 19, திங்கட்கிழமை

கொலை செய்ய அனுமதி கேட்கிறார் தப்சி

Menaka Mookandi   / 2015 மார்ச் 05 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே ஒரு கொலை செய்ய கடவுள் எனக்கு அனுமதி கொடுத்தால், மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு, ஊடகமொன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அந்த குற்றவாளியை நானே கொல்வேன் என்று நடிகை தப்சி ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் புதுடில்லியில் மருத்துவ கல்லூரி மாணவியொருவர் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவு செய்ய குற்றவாளிகள், பின்னர் அவரை குற்றுயிராக வெளியே தூக்கி வீசினர். மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மேற்படி மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்தனர். அந்த பஸ்ஸை ஓட்டிய டிரைவர் முகேஷ் சிங்கும் கைதானார். இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த பி.பி.சி ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர், சிறைச்சாலைக்குச் சென்று முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்தனர். அப்போது, 'மேற்படி மாணவி கற்பழிப்புக்கு உடன்பட்டு இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று பேட்டி அளித்து இருந்தார். இந்த பேட்டி பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இப்பேட்டியை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது.

முகேஷ்சிங் பேட்டிக்கு நடிகை தப்சியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

'முகேஷ் சிங்கின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால் நானே அந்த கற்பழிப்பு குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.

குற்றம் செய்தவர்கள் திருந்த வேண்டும் என்றுதான் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், முகேஷ் சிங் போன்றவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X