2025 மே 19, திங்கட்கிழமை

காத்திருக்கும் தப்சி

George   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் தப்சி அறிமுகமான ஆடுகளம் திரைப்படம் அவருக்கு வெற்றியாக அமைந்தபோதும், அதற்கடுத்து நடித்த வந்தான் வென்றான் தோல்வியடைந்துவிட சரியான திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று நடித்து வந்த தப்சி, தமிழில் அஜீத் நடித்த ஆரம்பம் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். 

இந்நிலையில், ராகவா லோரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஓப்பந்தமான தப்சி, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை திரைப்படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களுமே வெளியிடப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

அதோடு, ஹிந்தியில் அவர் நடித்துள்ள ரன்னிங் சாதி.கொம் என்ற திரைப்படமும் தற்போது திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. ஆக, தற்போது தப்சி  நடித்துள்ள 3 திரைப்படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகி விட்டன. 

இந்த திரைப்படங்களில் காஞ்சனா-2 திரைப்படத்தில் முதன்முறையாக அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும் தப்சி, இந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றால்தான் சினிமாவில் தனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால், பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவி போன்று திக் திக் மனநிலையுடன் திரைப்படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறாராம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X