2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

உடலை மெருகேற்றும் சானியாதாரா

George   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், அது வேற இது வேற என சில திரைப்படங்களில் நடித்தவர் சானியதாரா. தற்போது ஜிகினா, 30 ரூபாய் சீடி ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்து முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் சானியதாரா.

இது தொடர்பில் அவர் கூறுகையில், சினிமாவில் வெற்றி ரொம்ப முக்கியம். அதைப்பொறுத்துதான் பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்பு கிடைக்கும்.

ஆனால் நான் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனபோதும், பனிவிழும் மலர்வனம் திரைப்படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. அதைப்பார்த்து விட்டுதான் சில திரைப்படங்கள் புதிதாக ஒப்பந்தமாகின. 

இந்த நிலையில், இதுவரை வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் மட்டுமே நடித்துள்ள நான், அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் உடம்பை இன்னும் அழகுபடுத்தும் முயற்சியில் உள்ளேன்.

அதற்காக, இடைவிடாத படப்பிடிப்பு இருந்தாலும் வாரம் 2 நாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுக்கிறேன். அதோடு வாரத்தில் நான்கு நாட்கள் நடன பயிற்சி எடுக்கிறேன். இதனால் எனது உடல் அழகு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது எனகிறார் சானியதாரா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .