Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 09 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்லாண்டாவில் நடைபெற்ற 'இவிடே' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கேரளா திரும்பியுள்ளார் நடிகை பாவனா.
திரைப்படத்தின் கதை அட்லாண்டாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் நடைபெறும் தொடர்கொலைகள் பற்றியது. அட்லாண்டாவை சேர்ந்த பொலிஸ் அதிகாரியாக பிருத்விராஜ் நடிக்கிறார்.
பாவனா ஐடி நிறுவனத்தில் வேலைபார்ப்பவராக நடிக்கிறார். கதைப்படி விவாகரத்து பெற்ற, தனது குழந்தையுடன் தனியே வசிக்கின்ற பாத்திரம் பாவனாவுடையது.
இந்த திரைப்படத்தின் இயக்குநர் ஷியாம் பிரசாத்தின் இயக்கத்தில் ஏற்கனவே நடிப்பதற்காக பாவனாவுக்கு வந்த வாய்ப்பு கால்ஷீட் பிரச்சினைகளால் கைநழுவிப்போனது. அதனால் இப்போது வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார்.
ஒரு சில இயக்குநர்கள் தான் நம்மை நம் போக்கில் நடிக்கவிட்டு அதில் திருத்தங்கள் சொல்லி, நம்மிடம் இருந்து சிறந்த நடிப்பை வரவழைப்பார்கள். இயக்குநர்கள் ஜோஷி, ஹரிஹரனை தொடர்ந்து அந்தப்பட்டியலில் ஷியாம் பிரசாத்தை சேர்க்கலாம்.
எனக்கு நடிப்பதற்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தார் என இயக்குநர் புராணம் பாடுகிறார் பாவனா. இந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் தவிர மற்ற அனைவருமே அட்லாண்டா நாட்டை சேர்ந்தவர்கள் தானாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .