2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் சினிமாவிடம் தமன்னா தஞ்சம்

George   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் இருந்து கொலிவூட்டுக்கு வந்து கோலோச்சி வரும் நடிகைகளில் தமன்னா, ஹன்சிகா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்த ஹன்சிகாவுக்கு கதாநாயகி வேடம் அங்கே கிடைக்கவில்லை. ஆனால் தமிழ், தெலுங்கில் கதாநாயகி வேடங்கள் கிடைத்ததை அடுத்து இங்கேயே தங்கி விட்டார்.

ஆனால், தமன்னா தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய கதாநாயகியாக வலம்வந்தபோதிலும், தாய்மொழியான ஹிந்தியில் முன்னணி நடிகையாகியே தீருவது என்று வெறியில் இருந்து வந்தார். 

அதனால்தான் ஹிம்மத்வாலா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது ஹிந்தி சினிமா தனக்கு கதவு திறந்து விட்டது என்று உற்சாகத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களை ஓரங்கட்டி விட்டு பொலிவூட்டுக்கு ஓடினார்.

ஆனால், அவர் நடித்த ஹிம்மத்வாலா மட்டுமின்றி ஹம்சகல்ஸ், எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய ஹிந்தி திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், இப்போது தமன்னா சான்ஸ் கேட்டு செல்லும் இடங்களில் அவரது தோல்வி ராசியை சொல்லியே திருப்பி அனுப்புகிறார்களாம். 

அதனால், இனிமேல் ஹிந்தி சினிமா பக்கமே செல்லப்போவதில்லை என்று கூறி வரும் தமன்னா, தமிழ், தெலுங்கில் மீண்டும் அழுத்தமாக கால்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X