George / 2015 மார்ச் 09 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர் சல்மான் கான் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என நடிகை ஜெக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, ஜெக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளதாவது, திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், இத்துறையிலிருந்து விலகலாம் என்று நினைத்திருந்தேன்.
அப்போது, சல்மான் கான், எனக்கு கிக் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதற்காக, அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
கிக் திரைப்படத்துக்கு பிறகு, தற்போது எனக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருகின்றன. எனக்கென்று தனியாக, தற்போது டுபாயிலும், பஹ்ரைனிலும் ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது.
இதற்கு, நான், சல்மான் கான் மீது வைத்த முழு நம்பிக்கை தான் காரணம் ஆகும். இதன்பிறகும், அந்த நம்பிக்கையை நான் கைவிட மாட்டேன் என்கிறார் ஜெக்குலின் பெர்னான்டஸ்.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago