2025 மே 19, திங்கட்கிழமை

உடல் உறுப்புகளை தானம் செய்தார் பார்வதி ஓமனக்குட்டன்

George   / 2015 மார்ச் 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பார்வதி ஓமனக்குட்டன், தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்;.

இதுகுறித்து பார்வதி ஓமனக்குட்டன் கூறியுள்ளதாவது, இறந்த பின்னர் மண்ணில் வீணாகப்போகும் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலர் பயன் அடைவார்கள்.

நான் இப்படி ஒரு முடிவு எடுத்தது எனக்கு ஒரு வித புதிய அனுபவத்தை தந்தது. நான் உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன் என்று சொன்னதும், எனது பெற்றோர் மற்றும் சகோதரரும் எனக்கு ஆதரவு தந்தார்கள்.

எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பவர்கள் என் குடும்த்தார் தான். எனது பிறந்தநாளில் இப்படியொரு முடிவை எடுத்தேன்.

பொதுவாக எனக்கு பிறந்தநாளில் விருந்து கொண்டாடுவது பிடிக்காது, இதுபோன்று விஷயங்கள் மற்றும் பிறருக்கு உதவுவது தான் எனக்கு பிடிக்கும் என்கிறார் ஓமனக்குட்டன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X