Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 மார்ச் 17 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக குக்கூ தெரிவாகியுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதுக்காக 14 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டன.
அதில் சிறந்த திரைப்படமாக ராஜு முருகன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளிவந்த 'குக்கூ' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
காவியத் தலைவன் திரைப்படத்தில் நடித்த சித்தார்த் சிறந்த நடிகராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது 'காவியத் தலைவன்' திரைப்படத்துக்காக வேதிகாவுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த இயக்குனராக வசந்தபாலன், சிறந்த ஒளிப்பதிவாளராக வெற்றிவேல் மகேந்திரன் கயல் திரைப்படத்துக்காக தேர்வாகியுள்ளார்.
குக்கூ, ஜிகர்தண்டா ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார்.
சிறந்த பாடகிக்கான விருது 'என்னமோ எதோ' திரைப்படத்தில் புதிய உலகை என்ற பாடலை பாடியதற்காக வைக்கம் விஜயலட்சுமிக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த பாடகருக்கான விருது 'காவியத் தலைவன்' திரைப்படத்தில் வரும் 'வாங்க மக்கா வாங்க ' பாடலுக்காக ஹரிச்சரனுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த பாடலாசியர் விருது 'குக்கூ' திரைப்படத்துக்காக யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது.
இதேவேளை, வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலுமகேந்திரா நினைவு விருது 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படத்துக்காக இயக்குநர் ர.பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது.
இந்த விருதுகள் வழங்கும் விழா நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி தேதி நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago