George / 2015 மார்ச் 22 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது திரைப்படத்துக்கு வைத்த கெத்து எனும் தலைப்பை தற்போது உறுதிசெய்து தனது கெத்தை காட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 'நண்பேன்டா' திரைப்படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் திரைப்படத்தை 'மான் கராத்தே' திரைப்படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். இதில் சத்யராஜ், ஏமி ஜாக்சன், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதில் சத்யராஜ§க்கு உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரமாம். அவரின் மகனாக உதயநிதி நடிக்கிறார். 'மைனா', 'கும்கி' திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
ஆரம்பத்தில் இந்தப் திரைப்படத்துக்கு 'கெத்து' என்று தலைப்பிட்டு பட வேலைகள் நடந்து வந்தன. ஆனால் 'கெத்து' எனும் தலைப்பை வேறு யாரோ பதிவு செய்து வைத்திருந்ததால் வேறு தலைப்பு தேடி வந்தனர். கெத்துதான் கதைக்கேற்ற தலைப்பு. விடக்கூடாது என விரட்டி, கடைசியில் கெத்துவை பிடித்து விட்டார் உதயநிதி.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago