2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைபேசி காதல்

George   / 2015 மார்ச் 30 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தையை தினுசு தினுசாக காட்டியது சினிமா. கண்டவுடன் காதல், பார்க்காமலே காதல், விளையாட்டு காதல், விபரீத காதல், சைக்கோ காதல் இப்படி நிறைய பார்த்துவிட்டோம். 

விரைவில் கைபேசி காதல் என்ற திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்காமல் ஒரு அலைபேசியை காதலிக்கிறார். அதனுடனேயே வாழ்கிறார். உலகம் அவரை பைத்தியகாரனாக பார்க்கிறது. 

ஆனால் அலைபேசி அவரது வாழ்க்கைக்கு பாதை காட்டுகிறது. ஹீரோவின் மனநிலையை மாற்றி தன் மீது காதல் கொள்ள போராடுவதுதான் ஹீரோயின் வேலை.

இப்படி ஒரு திரைப்படத்தை புதுமுக இயக்குநர் திம்மம்பள்ளி சந்த்ரா என்பவர் இயக்குகிறார். கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 

கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராகேஷ் பி.திலக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X