2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வருண்மணியனுக்கு 'நோ' சொன்ன த்ரிஷா

George   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருண் மணியன் இயக்கும் திரைப்படத்தில் த்ரிஷா நடிக்கபோவதில்லை அவருக்கு பதிலாக டாப்ஸி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை த்ரிஷாவின் எதிர்கால கணவர் வருண் மணியன், ஜெய்யை ஹீரோவாக வைத்து திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ளது.

ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது. இளம் ஹீரோக்களுடன் நடிக்க மறுப்பு தெரிவிக்காத த்ரிஷா, ஜெய்யுடன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கெனவே பல திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதால் வருண் மணியன் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க நேரம் இல்லை என்று த்ரிஷா தெரிவித்தார். 

இதனையடுத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிப் திரைப்படங்களில் நடித்து வரும் டாப்ஸியிடம் ஜெய்க்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுள்ளனர். அவரும் மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தை அளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X