2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

Editorial   / 2025 நவம்பர் 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான , 350 கிராம் தங்க நகை, காணாமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் செல்லத்துரை ரமேஷ் வெள்ளிக்கிழமை ( 21 ) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி வழக்கு சான்று பொருள் பொறுப்பாளர் வியாழக்கிழமை ( 20 ) களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X