2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'நயன்தாரா, திரிஷா, திருமணம் முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்'

George   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்ற பின்னர்தான் தனது திருமணம் நடைபெறும் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பில் கருத்துகூறும்போது இவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் உள்ளதுடன் தமிழில் தற்போது தனுஷூடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி', மற்றும் 'மர்ம மனிதன்' ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன் ஹிந்தி திரைப்படமொன்றிலும் நடிக்கிறார். 

காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே அடுத்து அவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளிவந்தது. 

அத்துடன், தொழிலதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளிவந்தன. அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் காஜல் அகர்வால் இதனை மறுத்தார். நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கு தகுதியானவரை இதுவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார். 

அதன்பிறகு இதுபோன்ற வதந்திகள் சிலநாட்களாக அடங்கி இருந்தன. தற்போது மீண்டும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. 

இதற்கு பதிலளிக்கையில், நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா போன்றோர் எனக்கு சீனியர் நடிகைகள். அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. சீனியர் நடிகைகளுக்கு திருமணம் முடிந்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும் என்று காஜல் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .