2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விஷாலுடன் நிகிதா குத்தாட்டம்

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'பாயும் புலி' திரைப்படத்தில் நிகிதா, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். 

தமிழில் 'சத்ரபதி', 'வெற்றிவேல் சக்திவேல்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நிகிதா. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மற்ற மொழிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தமிழில் அவ்வளவாக கிடைக்கவில்லை. இதனால், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட்டம் போடும் நாயகி பட்டியலில் சேர்ந்தார் நிகிதா. 

அந்த வரிசையில், வெங்கட்பிரபு இயக்கிய 'சரோஜா' திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும், அந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிலும் நடித்திருந்தார். 

இந்த திரைப்படத்தில் நிகிதா ஆட்டம் போட்ட பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த பாடலில் இவர் ஆடிய நடனத்தை அனைத்துவிதமான ரசிகர்களும் வெகுவாக ரசித்தனர். 

இதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'அலெக்ஸ்பாண்டியன்' திரைப்படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். 

அந்த படமும் அவருக்கு பெரிதளவில் கைகொடுக்காமல் போகவே, கன்னடம், தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். 

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'பாயும் புலி' திரைப்படத்தில் நிகிதா ஒரு பாடலுக்கு நடனமாடயிருக்கிறாராம். நிகிதா ஆடும் இந்த பாடலை மார்க்கெட் போன்று செட் அமைத்து அங்கு படமாக்கியிருக்கின்றனர். 

'சரோஜா' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பிறகு இந்த பாடல் தனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று நிகிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

'பாயும் புலி' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சுசீந்திரம் இயக்கும் இந்த திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X