George / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாள நாட்டில் சனிக்கிழமை(25) நிகழ்ந்த நிலநடுக்கத்தில் தெலுங்கில் முன்னணி துணை நடிகராக உள்ள கே. விஜய் பலியானதாக தெரியவந்துள்ளது.
25 வயதான விஜய், எடாகாரம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நேபாள் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பி கொண்டிருந்த போது, திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விஜய் பலியானதாக இசையமைப்பாளர் கிஷன் கூறியுள்ளார்.
இவ்விபத்தில் அவருடன் சென்ற மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாப்பட்லாவை சேர்ந்த விஜய், துணை நடிகராக நடிப்பதுடன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது உடலை விரைவாக மீட்டுத்தருமாறு தெலுங்கு திரையுலகத்தினர் இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மனோஜ் நந்தம் மற்றும் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் எடாகாரம் திரைப்படத்தில், தினேஷின் நண்பராக விஜய் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago