2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் சமந்தா

George   / 2015 மே 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய திரைப்படமொன்றில் சிவகார்த்தியேன் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓவியா, ஸ்ரீதிவ்யா, ப்ரியாஆனந்த் என பெரிய அளவில் பிரபலமில்லாத ஹீரோயினிகளை தனக்கு ஜோடியாக்கி வந்த சிவகார்த்திகேயன், தன்னையும் முன்னணி ஹீரோவாக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மான்கராத்தே திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். 

ஆனால், அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க அழைத்தபோது முதலில் தயங்கினார் ஹன்சிகா. அதையடுத்து, அவருக்கு வழக்கத்தைவிட அதிகமான சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தனர். பின்னர், தனது புதிய திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைய ஆசைப்பட்டார் சிவகார்த்திகேயன். 

ஆனால், அவர் இவரைவிட ஸ்ரீதிவ்யா அதிக பொருத்தமாக இருப்பார் என்று சிலர் சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்தார். இந்நிலையில், தற்போது புதிய திரைப்பட நிறுவனம் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், அதில் தான் நடிக்கும் திரைப்படத்தில் சமந்தா நடிக்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார். 

அதற்கு சமந்தா உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆக, சூர்யா, விஜய், விக்ரமுடன் நடித்து விட்டு, தற்போது மீண்டும் சூர்யா மற்றும் தனுசுடன் நடிக்கும் சமந்தா, அதற்கடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .