2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொலிவூட்டை ஆக்ரமிக்கும் டார்லிங்

George   / 2015 மே 04 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டார்லிங் நிக்கி கல்ராணியின் வருகை கொலிவூட்டில் கொடிகட்டி பறந்த நடிகைகள் மனதையும் அச்சத்தில் அசைத்து பார்த்துவிட்டதாம்.

தமிழ் திரையுலகில் நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா, லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட சில நடிகைகள்தான் அதிகமான திரைப்படங்களில்; நடித்து வந்தனர். 

ஆனால், இந்த ஆண்டின் ஆரம்பம் நயன்தாரா, சமந்தாவுக்கு எப்போதும் போலவே பிரகாசமாக இருந்தபோதும், ஸ்ரீதிவ்யா, லட்சுமிமேனனுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஹன்சிகாவுக்குகூட புலிக்கு பிறகு பெரிய திரைப்படங்கள் எதுவும் இல்லை. 

காரணம், அவர்களுக்கு எதிர்பார்த்தபடி முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் கிடைக்கவில்லை. மாறாக, அவர்களை மனதில் கொண்டு கதை பண்ணி வைத்திருந்தவர்கள்கூட, டார்லிங் திரைப்படத்தில் நடித்த நிக்கி கல்ராணி பக்கம் சாய்ந்துள்ளனர். 

அந்த வகையில், டார்லிங் திரைப்படத்தை அடுத்து நிக்கி கல்ராணி மலையாளத்தில் பிசியானபோதும், தற்போது கோ-2, கவலை வேண்டாம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேபோல், கீர்த்தி சுரேஷோ ரஜினி முருகன், பாம்பு சட்டை உட்பட ஒரே நேரத்தில் 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

ஆக, இந்த நடிகைகளிடம் மேலும் சில இயக்குநர்களும் கதை சொல்லி வருகின்றனர். இதனால், கொலிவூட்டில் நடித்து வரும் வளரும் நடிகைகளுக்கும், வளர்ந்து விட்ட நடிகைகளுக்கும்கூட இந்த நடிகைகளால் தங்களது மார்க்கெட் சரிந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X