George / 2015 மே 07 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, ஆண் குழந்தையொன்றை பெற்றுள்ளார்.
சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு சௌந்தர்யா ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
மகளுக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் ரஜினி மகிழ்ச்சி அடைந்ததுடன் வைத்தியசாலைக்கு சென்று பேரக்குழந்தையை பார்த்து சந்தோஷப்பட்டதுடன் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
குழந்தை பிறந்தையடுத் திரையுலகினர் பலர் ரஜினிக்கும் சௌந்தர்யாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வின்ராம் குமாருக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
படையப்பா, பாபா, சண்டக்கோழி, சந்திரமுகி, சிவகாசி உள்ளிட்ட திரைப்படங்களில் சௌந்தர்யா, கிரபிக் டிசைனராக பணியாற்றியுள்துடன் கடந்த வருடம் ரஜினி நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
அதன் பிறகு அவர் கர்ப்பமானதால் திரைப்படவேலைகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago