George / 2015 மே 19 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அலைபாயுதே' திரைப்படம் வெளியான பின்னர், பல இளம் பெண்களின் மனதை அலையாய் அடித்துச் சென்றவர் மாதவன். அப்படியே தமிழில் அடுத்த கமல்ஹாசனாக உயர்வார் என்று பார்த்தால் திடீரென காணாமல் போய்விட்டார்.
'அலைபாயுதே' திரைப்படத்துக்குப் பின்னர் அவருக்குப் பெயர் சொல்லும்படியாக அமைந்த ஒரே திரைப்படம் ரன் மட்டுமே. அதன் வெற்றிக்குப் பிறகும் அவர் தன்னை தமிழில் தக்க வைத்துகொள்ள முயற்சிக்கவில்லை. அவ்வப்போது ஹிந்தியிலும் நடித்துக்கொண்டிருந்ததால் தமிழில் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்பே இல்லாமல் போனது.
இப்போது 'தனு வெட்ஸ் மனு 2' திரைப்படத்துக்கான வேலைகளில பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்த் திரைப்படங்களில் விட்ட இடத்தைப் மீண்டும் பிடிக்க ஆசைப்படுவதாக ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் மாதவன் குறிப்பிட்டுள்ளாராம்.
3 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago