2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அழகுப் பதுமை அவந்திகா

George   / 2015 மே 19 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கில் தயாராகிவரும் சரித்திர திரைப்படமான பாகுபலியின் புகைப்படங்கள், அத்திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.

பாகுபலி திரைப்படத்தின் கதாப்பாதிரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் இயக்குநர் ராஜமௌலி இதுவரை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. 

இத்திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், நாயகன் பிராஸ், நாயகி அனுஷ்கா, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சத்யராஜ், நடிகர் சுதீப் என பலரது கதாப்பாத்திரங்களை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

அந்த வகையில் இத்திரைப்படத்தில் அவந்திகாவாக நடித்துள்ள தமன்னாவின் புகைப்படத்தை ராஜமௌலி தற்போது வெளியிட்டுள்ளார். 

அழகுப் பதுமையான அவந்திகாவாக மாறி இருக்கும் தமன்னாவின் புகைப்படம் இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .