2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை

George   / 2015 மே 28 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன் மீது சுமத்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நடிகை சன்னி லியோன், 'தானே' பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார்.

பொலிவூட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிகையில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னி லியோன் புகைப்படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று பார்த்தால் மேலும் பல ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன என்று குற்றஞசாட்டப்பட்டுள்ளது.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து ஜனஜக்ரிதி சமிதி அமைப்பை சேர்ந்த ஒரு தொண்டர் மும்பை டோம்ப்வில்லி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு'தாகே' பொலிஸ் நிலையத்தின் சைபர் செல் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் காலசாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தனது உறவினர்கள் மற்றும் சட்டத்தரணியுடன் 'தானே' சைபர்செல் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடிகை சன்னி லியோன் நேற்று ஆஜரானார்.
 
சுமார் ஒரு மணி நேரம் அங்கு காத்திருந்த சன்னி லியோனை நேரில் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் பலர் முயன்றதால் அவர் அமர்ந்திருந்த இடத்தில் பெருங்கூட்டம் கூடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X