2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆர்த்தி அகர்வால் மரணம்

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஆர்த்தி, நேற்று சனிக்கிழமை (06) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 31 வயதான ஆர்த்தியின் மரண செய்தி திரை உலக பிரபலங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஆர்த்தி அகர்வால், தனது 16ஆவது வயதில் பாகல்பன் என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

திடீரென திரைப்படங்களிலிருந்து காணாமல் போன ஆர்த்தி, மீண்டும் தமிழில் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆர்த்திக்கும் அமெரிக்க தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். நடிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்.

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகை ஆர்த்தி அகர்வாலின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று கூறி பிரபலங்கள் தமது அனுதாபங்களை  தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • satham Tuesday, 09 June 2015 03:56 AM

    Nambalama? aatharam...

    Reply : 0       0

    nisaar mohamed nafeel Tuesday, 09 June 2015 07:27 AM

    Aalnta kavaliyaha irkkindum?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X