Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூன் 12 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயதான ஹீரோக்களுடன் ஜோடிசேர தயாராக உள்ளதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளாராம்.
தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இளம் ஹீரோக்களுடன் நடித்த அவர் இப்போது வயதான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சம்மதித்து உள்ளது தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
வேறு சில இளம் கதாநாயகிகள் நடிக்க முன்வராத நிலையில் அதற்கு அஞ்சலி சம்மதம் தெரிவித்ததை பற்றி பலரும் பலவிதமான பேசுகின்றனராம்.
வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் இளம் ஹீரோக்கள் அஞ்சலியை ஒதுக்கி விடுவார்களே! இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, வயதான ஹீரோக்களுடன் நடிப்பது தவறல்ல. நான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று முகத்திலடித்ததுபோல கூறிவிட்டாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
3 hours ago