2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'தலைவா'வை முந்திய 'தல'

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைவா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினி மற்றும் விஜய் ஆகியோரை பின்தள்ளி தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜீத் முன்னணிக்கு வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

போப்ர்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள பட்டியலிலேயே அஜீத் இவ்வாறு முன்னிலை வகிக்கின்றார். கடந்த 2014ஆம்ஆண்டின், சினிமா, விளையாட்டு, எழுத்தாளர்கள் போன்ற துறைகளின் முன்னணி பிரபலங்களின் பட்டியலை, பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

அதில், அதிகமாக வருமானம் பெறுவோர் வரிசையில், ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளி,அஜீத் முன்னிலை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் இந்த பிரபலங்கள் சம்பாதித்த பணம், அவர்களின் மொத்த பண தரவரிசை மற்றும் புகழின் அடிப்படையில், ஒன்று முதல், 100 வரை பட்டியலிடப்பட்டுள்ளனர்.

முதல் இடத்தில், பொலிவூட் நடிகர் சல்மான் கான் உள்ளார். அவர், கடந்த ஆண்டில், 244 கோடி இந்திய ரூபாய் வருமானமாக பெற்றுள்ளார். பணத்திலும், புகழிலும் முதல் இடத்தில் உள்ளார, இரண்டாவது இடத்தில், அமிதாப் பச்சன் உள்ளார். அவர், 197 கோடி இந்திய ரூபாய் சம்பாதித்துள்ளார். அவரை அடுத்து, ஷாரூக் கான், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர், 202 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 

அமீர் கான்;எட்டாவதாகவும் நடிகை தீபிகா படுகோனே ஒன்பதாவதாகவும்; ஹிருத்திக் ரோஷன்; 10ஆவது இடத்திலும் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தமட்டில், நடிகர் விஜய், 41ஆவது இடத்தில் உள்ளார். இவர், கடந்த ஆண்டில், 33 கோடி இந்திய ரூபாய் சம்பாதித்துள்ளார். பணத்தில், 23ஆவது இடத்திலும் புகழில், 80ஆவது இடத்திலும் உள்ளார். 

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 45ஆவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில், 37 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். பணத்தில் 21ஆவது இடத்திலும், புகழில் 89ஆவது இடத்திலும் உள்ளார். ஆனால், 51ஆவது இடத்தில் உள்ள அஜீத், வருமானத்தில், விஜய், ரஜினியை பின்னுக்குத் தள்ளி, 40 கோடி இந்திய ரூபாய் சம்பாதித்துள்ளார்.

பணத்தில் 19ஆவது இடத்திலும், புகழில் 98ஆவது இடத்திலும் உள்ளார். இதன் மூலம், இந்த மூவரில், கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தது, அஜீத் என்பது தெரிய வருகிறது.

போர்ப்ஸ் பத்திரிகை, 2013 ஒக்டோபர் முதல், 2014 செப்டம்பர் வரை, பிரபலங்கள் சம்பாதித்த பணத்தை, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள், தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பெற்றுள்ளது.

நடிகர்களின் புகழைக் கணக்கிடும் போது, சமூக வலைதளங்களில் எந்த அளவு அந்த நடிகர்கள் விவாதிக்கப்பட்டனர் என்பதை அடிப்படையாக வைத்து கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X