2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சினேகாவுக்கு சீமந்தம்

George   / 2015 ஜூன் 19 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை சினேகாவின் வளைகாப்பு எளிமையான முறையில் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வியாழக்கிழமை(18) நடைபெற்றது.

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். 

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. 

சினேகா இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். 

7 மாத கர்ப்பிணியான சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது. 
சினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், வளைகாப்பில் கலந்துகொண்டார்கள். 

நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், இயக்குநர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்புக்கு வந்து சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X