2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வைரஸாகிய புலி டீசர்

Menaka Mookandi   / 2015 ஜூன் 21 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு வெளியாக இருந்த புலி திரைப்படத்தின் டீசர், மதியம் பிற்பகல் 2 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. இணையங்களில் திருட்டுத்தனமாக புலி திரைப்படத்தின் டீசர் வெளியானதை அறிந்த படக்குழுவினர் தாங்களே டீசரை வெளியிட்டுவிட்டனர்.

தற்பொழுது இணையங்களில் புலி திரைப்படத்தின் டீசர் வைரஸாக பரவி வருகிறது. 55 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரானது விஜய் இரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராணியாக ஸ்ரீ தேவியும் அரச உடையில் விஜயும் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் வெளியான டீசரை விஜய் இரசிகர்கள் வெகுவாகப் புகழ்ந்து உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .