2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ராஜமவுலியின் அடுத்த பாகுபாலி

Menaka Mookandi   / 2015 ஜூன் 28 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நான் ஈ' திரைப்படத்தை அடுத்து 'பாகுபலி' பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் ராஜமவுலி. முதல்பாகம் முடிந்த கையோடு 2ஆம் பாகத்துக்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார்.

இயக்குநர் கேட்டுக்கொண்டதை அடுத்து திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். ஒரு சந்திப்பில் சிறிய கதாபாத்திரத்திலாவது பாகுபலியில் நடிக்க வேண்டும் என ராஜமவுலியிடம் கேட்டார். இது இயக்குநரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதாம்.

இதுகுறித்து ராஜமவுலி கூறும்போது, 'சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்க மாட்டேன் என்று நான் எப்போதும் சொன்னது கிடையாது. என்னிடம் அவர் நடிக்க சான்ஸ் கேட்டபோது தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டேன்' என்றார்.

'சிங்கம் 3'ஆம் பாகத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சூர்யா. அதேபோல், பாகுபலி 2ஆம் பாகத்தை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி. தற்போதுள்ள திரைப்படங்கள் முடிந்ததும் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிப்பார். இதற்கான கதையை யோசிக்கத் தொடங்கி விட்டாராம் ராஜமவுலி.

அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் தொடங்கும் என்றும் அல்லது பாகுபலி 2ஆம் பாகத்திலும் சூர்யா நடிக்கக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .