2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அச்சத்தில் சந்தானம்

George   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுந்தர் சி.யை போல மற்ற நடிகர்களும் எதிர்காலத்தில் தன்னை கழற்றி விட்டுவிடுவார்களோ என நடிகர் சந்தானம் அச்சமடைந்துள்ளாராம்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்கள்;, எனக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே ஹீரோவாக நடிப்பேன் என்று சந்தானம் விட்ட ஓப்பன் ஸ்டேட்மென்ட் தான் இதற்கு காரணமாம்.

வடிவேலு-சுந்தர்.சி நட்பில் விரிசல் விழுந்தபோது அந்த கேப்பில் சுந்தர்.சியின் பாசறைக்குள் ஐக்கியமாக்கிக்கொண்டவர் சந்தானம். 

அதோடு, மற்ற திரைப்படங்களில் நடிக்க சம்பளத்துக்கு முதலிடம் கொடுத்தவர், சுந்தர்.சி திரைப்படத்தில் தனக்கு திருப்திகரமான காமெடி காட்சிகள் இருக்கும் என்பதால் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்தார்.

அதனால், சில மேடைகளில் சந்தானம் மாதிரி ஒரு காமெடியனை பார்த்ததேயில்லை என்று புகழ்ந்து தள்ளி வந்தார் சுந்தர்.சி.
ரெண்டு, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை ஆகிய திரைப்படங்களில் அவர்களின் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் அதன்பிறகு திடீரென்று சந்தானம் ஹீரோவாகி விட்டார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்கள்;, எனக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே ஹீரோவாக நடிப்பேன் என்று சந்தானம் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். 

அதன்பின்னர்தான், தனது புதிய திரைப்படத்துக்கு சூரியையை ஒப்பந்தம் செய்துவிட்டார் சுந்தர்.சி., இதனால் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர்.சி போன்ற இயக்குநர்கள் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த சந்தானம் மனதளவில் ஏமாற்றம் அடைந்திருக்கிறாராம்.  

அதோடு, தற்போது தனக்கு ஆதரவு கொடுத்து வரும் ஆர்யா, உதயநிதி போன்றோர்களும் எதிர்காலத்தில் தன்னை கழட்டிவிட்டு விடுவார்களோ என்கிற அச்சமும் சந்தானத்துக்கு மனதளவில் ஏற்பட்டுள்ளதாம். 

அதனால் தனது ஹீரோ மார்க்கெட்டை ஸ்டெடியாக்கிக்கொள்ள தீவிரமடைந்திருக்கிறார் அவர்.

அச்சம்தான், நியாயமான அச்சம்தான்... வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கவேண்டியதுதானே சந்தானம் சார்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X