2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சத்தமில்லாமல் சாதித்த ரோமியோ ஜூலியட்

George   / 2015 ஜூலை 01 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வெளியான திரைப்படங்களில் ரோமியோ ஜூலியட்தான் உண்மையான வெற்றிப்படம் என திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

ஜெயம்ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் விநிபோகஸ்தர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 11 கோடி இந்திய ரூபாய் ஷேர் கிடைத்திருக்கிறதாம். 

ரோமியோ ஜூலியட்  வர்த்தகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால் அத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை 6.5 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாம்.

அண்மையில்; வெளியான திரைப்படங்களில் சாட்டிலைட் உரிமை அதிகவிலைக்கு விற்கப்பட்ட திரைப்படம் ரோமியோ ஜூலியட்தான்.

சில திரைப்படங்கள் வெளியான அடுத்தநாளே வெற்றி வெற்றி என்று கூவுகிறார்கள். அதெல்லாம் வெற்றித்திரைப்படம் என மக்களை நம்ப வைத்து தியேட்டருக்கு வர வைக்கும் தந்திரம்தான். 

வெற்றிப்படம் என்று விளம்பரப்படுத்தப்படும் திரைப்படங்கள் எல்லாம் உண்மையான வெற்றிப்படம் இல்லை. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X