2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜெயம்ரவிக்கு பெரிய மனசுங்க.. மனம் திறந்த த்ரிஷா

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை த்ரிஷாவும் நம்ம ஜெயம் ரவியும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துபேசியுள்ளனர்.

அப்பாடக்கர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி, அதில் நடித்துள்ள த்ரிஷா-அஞ்சலி இருவரில் த்ரிஷாவின் நடிப்பை புகழ்ந்து பேசி வருகிறார்.

சில காட்சிகளை குறிப்பிட்டு இந்த மாதிரியெல்லாம் இப்போது நடிப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் இல்லை. அது த்ரிஷாவினால் மட்டுமே முடியும் என்று அவர் இல்லாத நேரத்தில் சொன்னாராம். 

இது த்ரிஷாவின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, இப்படி கதாநாயகிகளின் நடிப்பை பெருமையாக சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது ஜெயம்ரவியிடம் உள்ளது என்று பதிலுக்கு அவரை புகழ்ந்து தள்ளினாராம்.

ஏற்கெனவே, ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் ஹன்சிகா தன்னை விட சிறப்பாக நடித்திருந்ததாக ஜெயம்ரவி வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்த மாதிரி கதாநாயகிகளின் நடிப்பை எந்த ஹீரோக்களும் இத்தனை வெளிப்படையாக இதுவரை சொன்னதில்லை என கோடாமபாக்கத்தில் பேச்சு அடிப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .